TAMIL
- இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. பெரும் நகரம் முதல் சிறு கிராமம் வரை அனைத்து தரப்பினராலும் யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இப்படி யுபிஐ மூலமாக பணம் அனுப்பும் போது சிலர் கவனக்குறைவாக தவறான எண்ணுக்கு பணத்தை அனுப்பி விடுகின்றனர். அப்படி பணத்தை தவறாக அனுப்பிய பணத்தை மீட்க முடியுமா? என்பது பற்றியும் அடுத்து என்ன செய்தால் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற விவரங்களை இங்கே காணலாம்.
- இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
- சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி உள்ளது. பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர்.
- பண மதிப்பு இழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யப்படுவது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
- டிஜிட்டல் வாலட்டுகள், பிம், யு.பி.ஐ, பேடிஎம், கூகுள் பே, பிம் ஆப், போன் பே மற்றும் பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிக எளிமையாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 12.8 லட்சம் கோடி பரிவர்த்தனை யுபிஐ மூலாமக நடைபெற்றுள்ளது.
- யு.பி.ஐ. முறையில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையின்போது நமக்கே தெரியாமல் தவறான யு.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெறுவது என்பது இயலாத காரியம் தான்.
- எனவே ஒரு வேளை நீங்கள் தவறுதலாக வேறொரு யு.பி.ஐ. கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை எந்த வழிகளில் திரும்ப பெற முடியும் என்பது குறித்த விரிவான விவரங்களை இங்கே காணலாம்.
- நீங்கள் எந்த செயலி மூலம் பணத்தை அனுப்பினீர்களோ அந்த செயலியின் உதவி குழுவை தொடர்பு கொண்டு நடந்த தவறை தெரிவிக்க வேண்டும்.
- அதாவது கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்பினால் அதன் ஹெல்ப் செண்டரில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அனைத்து செயலிகளும் இது போன்ற பிரச்சினைகளை கையாள்வதற்காக தங்களுக்கென தனி வாடிக்கையாளர் சேவை குழுவை வைத்துள்ளன.
- பிம் (BHIM) எனப்படும் பாரத் இன்டர்பேஸ் பார் மணி என்ற செயலியின் இலவச வாடிக்கையாளர் உதவி எண்ணான 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கோர முடியும்.
- இது பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட எண் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
- அதேபோல் NPCI இணையதளத்தில் உள்ள குறை தீர்ப்பு பிரிவில் இந்த விவரங்களை பதிவிடலாம். இந்த இணையத்தளத்தில் பண பரிவர்த்தனை விவரங்கள், மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
- உங்கள் வங்கிக் கணக்கு ஸ்டேட்மண்ட் ஆகியவற்றையும் இணைத்து உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.
- பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்து கொண்டால் ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. அந்த யுபிஐ ஐ.டி. மற்றும் அனுப்பிய பணத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து நீங்கள் எந்த கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினீர்களோ அந்த வங்கியின் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக இந்த தகவல்களை அனுப்பி அவர்களிடம் உதவி கோரலாம்.
- முடிந்த வரை வங்கியின் மேலாளரை சந்தித்தும் உதவி கேட்பதே சிறந்தது. இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரே இடம் வங்கி மட்டுமே. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதை செய்ய வேண்டும்.
- சில நேரங்களில் தவறான யு.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது நீங்கள் தவறாக பதிவிட்ட யுபிஐ கணக்கு செயல்பாட்டில் இல்லையென்றால், உங்களது பணம் உடனடியாக உங்களது கணக்கிற்கே திரும்பி வந்துவிடும்.
- இப்படி வந்தால் வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக பிரச்சினை இல்லைதான். எனவே உங்கள் பணம் உடனடியாக திரும்பவில்லை என்றால் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த யு.பி.ஐ. கணக்கு வேறு ஒருவருடையது என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.
- அந்த யுபிஐ - உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நீங்கள் செலுத்திய பணம் டெபாசிட் ஆகியிருக்கும். எனவே நீங்கள் உடனடியாக உங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டியதுதான்.
- எது எப்படியோ முடிந்த வரை பணத்தை யாருக்கும் அனுப்பும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை என்ன மூன்று முறை கூட நாம் பதிவிடும் ஐடி விவரங்கள் சரியானது என்பதை உறுதி செய்து அனுப்புவதே சிறந்தது.
- Digital transactions through UPI have increased in India. From big cities to small villages, UPI is being used by everyone.
- While sending money through UPI, some people inadvertently send money to the wrong number. Is it possible to recover the wrongly sent money? Here you can find details about what to do next and the possibility of getting money.
- Digital money transactions in India have been on the rise in recent times. In particular, money transactions through UPI have increased manifold in the last few years.
- From small box stores to shopping malls, payments can be made using the UPI facility. Many customers prefer paying through UPI over cash transfer due to ease of use and ability to send money in seconds.
- Digital remittances are taking off at a jet pace after the devaluation and the coronavirus pandemic. Digital wallets, Bim, UPI, Paytm, Google Pay, Bim App, Phone Pay and many other apps have made digital money transactions very easy. 12.8 lakh crore transactions were done through UPI in the month of December alone.
- UPI Unknowingly wrong U.P.I. Once money is sent to the account, it is impossible to get it back.
- So maybe you mistakenly entered another UPI. Here you will find detailed information on how to get your money back once you have sent it to the account.
- You should contact the support team of the app through which you sent the money and report the error.
- That is, if you send money through Google Pay, you can contact its help center and give information. All apps have their own dedicated customer care team to deal with such issues.
- Help can be sought by calling the toll-free customer helpline number 18001201740 of Bharat Interbase Bar Money, also known as BHIM.
- It is to be noted that this is a number created exclusively for customer queries and complaints.
- Contact this number and inform them of the full details of the erroneous transaction.
- Also these details can be posted in Grievance Adjudication section of NPCI website. You have to post details like payment details, email and mobile number linked to bank account on this website.
- You should also attach your bank account statement to file your complaint.
- If you realize that money has been sent by mistake, don't delay even for a second. That UPI I.D. You can take a 'screenshot' of the details of the money sent and the value of the money sent and send this information to the bank from which you sent the money via email or phone and ask for help.
- It is best to meet the bank manager and ask for help whenever possible. Bank is the only place that can help you in such cases. This should be done as quickly as possible.
- Sometimes wrong UPI. If the wrong UPI account you entered while sending money to the account is not active, your money will be returned to your account immediately.
- If this happens, there is no big problem for the customers. So if your money is not returned immediately then you have wrongly registered UPI. You can guess that the account belongs to someone else.
- Your payment will be deposited into that UPI-linked bank account. So you need to immediately start working to get your money back.
- As far as possible, it is best to check once, twice or even thrice that the ID details we enter are correct before sending money to anyone.
0 Comments