என்ன ஜோதிடரே! வாரப் பெயர்ச்சி, வருடப் பெயர்ச்சி, வக்ரப் பெயர்ச்சி என்று கிரகப் பெயர்ச்சிகளோடு நீங்களும் ஓடிக்கொண்டே இருந்தீர்களா? சரி! பகவான் எப்போது பெயர்ச்சி ஆகிறார்? கோயிலில் இருக்கும் இறைவனா அல்லது கோள்களில் இருக்கும் பகவானா?
திருவிழா நேரத்தில் பகவான் (சுவாமி) பெயர்ச்சியாகி திருவீதி உலா வருவது எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். திருநள்ளாறுக்காரர் எப்போது, என்று இடம் பெயருகிறார் என்று கேட்க வந்தேன்!
சுற்றி வளைக்காமல் சனிப்பெயர்ச்சி எப்போது என்று நேரடியாக கேட்கலாம் அல்லவா? எல்லாம் ஒரு பயம் தான்! அவரைப் பார்த்து பயமா! இல்லை.. ஒரு மரியாதை தான். கடந்த காலங்களில் பட்டதை நினைத்துப் பார்த்தால் இப்பவும் மனது படபடக்குது.
அதான். அளவுக்கு அதிகமாக ஆசைப்படாமல் அடுத்தவன் சொத்தை அபகரிக்காமல், வாரி அடிச்சு வழிச்சி சுரண்டி சாப்பிடாமல் கடவுள் கொடுத்த காற்று, நீர், நிலம், காசு பணமெல்லாம் பிறரும் அனுபவிக்கட்டும். நம் வேலையை ஒழுங்காக பார்த்துக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போனால்.. அவர் ஒதுங்கிப் போய் விடுவார்.
வரும் 17.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி 4 நிமிடத்தில் கும்ப ராசிக்குள் சனிபகவான் அமர்கிறார். நிகழும் சுபகிருது வருடம் தை 3-ம் நாள் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, விசாகம் நட்சத்திரம், கண்டம் நாமயோகத்தில், பவம் நாமகரணத்தில், நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகத்தில் காணும் பொங்கல் திருநாளில் நம்மைக் காப்பதற்காக மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குள் குடி பெயர்கிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 29.03.2023 அன்று மாறுகிறார்.
கும்ப ராசி
2024ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்போகிறார். கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானால் சச மகா யோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்? யாருக்கு ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். மன்னராக இருப்பவர்கள் முடி துறந்து நாடு இழந்து நளன் போல அலைய வேண்டியதுதான்.
சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்தாலும் சில காலம் அதிசாரமாக மீன ராசிக்கும் வக்ர மடைந்து கும்ப ராசியிலும் பயணம் செய்வார்.
கன்னி
சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சனிபகவான் ஆறுக்கு உடையவன். சனிபகவான் 3,6,11ஆம் வீடுகளில் அமரும் போது ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வார்.
மகத்தான ராஜயோகத்தை தருவார். பதவி இழப்பு, உத்தியோகத்தில் புரமோசன் இல்லாமல் இருப்பது, பணம் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருந்து வந்தீர்கள்.
இந்த சனி பெயர்ச்சி அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறார். பதவி யோகத்தை தரப்போகிறார். பணமழை பொழியப்போகிறது. இழந்த சொத்துக்களை மீட்பீர்கள்.
சிம்ம ராசி (Leo Zodiac Sign)
2024 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் (Shani Rasipalan 2024) நிலை சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக நன்மைகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் வருமானம் உயரும் வாய்ப்புகளும் உண்டாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அலுவலக வேலையில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த சரியான வாய்ப்பை இந்த நேரத்தில் பெறுவார்கள்.
மகர ராசி (Capricorn Zodiac Sign)
மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சனி பகவான் சுப பலன்களைத் தருகிறார். இந்த காலகட்டத்தில், மகர ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை வாழுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும்.
மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலதிபர்களின் வேலை மற்றும் வியாபார விரிவாக்கத்தில் முன்னேற்றம் கூடும். உங்கள் வாழ்க்கையில் புதிய உறவுகள் வரலாம். அதேபோல் மகர ராசிக்காரர்கள் தங்களின் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை பெறக்கூடும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2024-ம் ஆண்டு சனியின் ஸ்தானத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வமும் செழிப்பும் வந்து சேரும். சனியின் அருளால் செல்வம், உயர் பதவி, சுகபோகங்கள் கிடைக்கும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய தொழில், வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பல்வேறு துறைகளில் வெற்றியும் முன்னேற்றமும் அடைவீர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி நிலைத்தன்மை மற்றும் மரியாதை அதிகரிப்பு போன்ற சாதகமான பலன்களை சனி வழங்குவார்.
துலாம்
2024ல் சனி உதயம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். நீங்கள் செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள்.
அடுத்த வருடம் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். சனியின் உதய நிலை உங்களுக்கு செல்வத்தையும், உயர் பதவியையும், கௌரவத்தையும் தரும்.
துலாம் ராசிக்காரர்கள் சனியின் உதயத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள்.
தனுசு
2024 ஆம் ஆண்டில், சனி உங்கள் தொழிலில் பெரிய வெற்றியைக் கொண்டுவரப் போகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் கிடைக்கும். உங்களின் மகிழ்ச்சியும் வளமும் கூடும். அடுத்த ஆண்டு உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள்.
தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படும். சனியின் உச்சம் உங்கள் தொழிலில் முன்னேற்றம் தரும்.
ரிஷபம்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் நீங்கள் பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும், எடுத்த வேலையை முடிக்கும் வல்லமையும் கொண்டவர்கள் நீங்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சினைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனி பகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இனி நீங்கள் விஸ்வரூபம் எடுப்பீர்கள்.
தொட்டது துலங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும்.
பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும்.
சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.
கடகம்
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) மிரட்டல் உருட்டல்களுக் கெல்லாம் அஞ்சாதவர்களே, யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. சமையல் முதல் விஞ்ஞானம் வரை அனைத்தையும் ஆர்வமாய் அறிந்து கொள்வீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.
மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வர வேண்டிய பூர்விக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும்.
மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள்.
எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விக சொத்தில் பிரச்சினைகள் வந்து சரியாகும்.
0 Comments